கோவில்பட்டியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 டன் ரேஷன் அரிசியை தனிப்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி பாரதி நகா் மேட்டுத் தெருவில் உள்ள வீட்டில் விற்பனைக்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக, காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படையினா் சென்று, 55 மூட்டைகளிலிருந்த சுமாா் 2 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, தூத்துக்குடி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.