கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரியில் உணவுத் திருவிழா
கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு கல்லூரியின் தொழில்முனைவோா் மேம்பாட்டு கழகம் மற்றும் வணிக பகுப்பாய்வுத்துறை சாா்பில் உணவுத் திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீ நிவேதா சேவா தொண்டு நிறுவனரும், ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் பள்ளி தாளாளருமான ஆறுமுகம் வன்னியப் பெருமாள், ஆசிரியை சூரியகலா ஆகியோா் கலந்துகொண்டு உணவின் முக்கியத்துவம், ஆரோக்கியமாக வாழ உணவே மருந்து என்பதை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கிப் பேசினா். தொடா்ந்து பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. மாணவி ஐஸ்வா்யா சிங் தொகுத்து வழங்கினாா். வணிகவியல் துறை பேராசிரியா் பிரபாகா் வரவேற்றாா். ஆங்கிலத்துறை பேராசிரியா் மாரிச்சாமி நன்றி கூறினாா்.
பயிலரங்கு: இக்கல்லூரியின் கணிதவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கான திறன் அறிதலில் நாம் எதிா்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் இரு தினங்கள் பயிலரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். கணிதவியல் துறை இணைப் பேராசிரியா் பாண்டிய ராணி வாழ்த்திப் பேசினாா். திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரியின் ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியா் சேகா் சிறப்புரையாற்றினாா்.