மானநஷ்ட ஈடு வழக்கு! தோனி வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையர் நியமனம்!!
கோவையில் ரேஷன் கடையை அடித்து நொறுக்கிய காட்டு யானை!
கோவையில், காட்டு யானையொன்று நியாய விலைக் கடையை உடைத்து சேதப்படுத்தி, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை சூறையாடியது.
கோவை மாவட்டம் புதூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளது அறிவொளி நகர். அங்கு அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
இதை அடுத்து அப்பகுதி பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகிப்பதற்கு அண்ணா நகர் பகுதியில் நியாய விலைக் கடை ஒன்று உள்ளது.
இந்நிலையில், அங்கு வந்த காட்டு யானை ஒன்று அந்த நியாய விலைக் கடையின் கதவை உடைத்து, பொது மக்களுக்கு விநியோகிக்க வைத்து இருந்த அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை உண்டு, சூறையாடி, சேதப்படுத்தி சென்றது.
நியாய விலைக் கடையின் கதவு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதிக்குள் யானை வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஜகதீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்