செய்திகள் :

கோவையில் லாரி மோதி தெற்கு மகளிர் காவல் ஆய்வாளர் பானுமதி பலி!

post image

கோவையில், ஈச்சர் வாகனம் மோதியதில் தெற்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமராஜர் ரோடு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சரவணா பார்க்கிங் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாரவிதமாக எதிரே வந்த அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக கோவை காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆய்வாளர் பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் கூராய்வுக்காக பானுமதி உடல் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வாளர் பானுமதி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செப். 28 திறக்கப்படுகிறது தி.நகர் மேம்பாலம்! முடிவுக்கு வரும் வாகன நெரிசல்

சென்னை மாநகராட்சியால் தெற்க உஸ்மான் சாலையை சிஐடி நகர் முதன்மை சாலையுடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலம், செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவிருக்கிறது.ரூ.164.92 கோடியில் ... மேலும் பார்க்க

என்னைப் போல பேசுவதாக ஆப்பிரிக்க அதிபருக்கு பாராட்டு: சீமான்

சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மற்றும் தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் இருந்தவர்... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகிய இருவரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு கூடுதல் நீதிபதிகளான என்.செ... மேலும் பார்க்க

தமிழ் மொழி திறனறித் தோ்வு: தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு தோ்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயில் கட்டுமான பணிகள்: அக். 5-இல் நீதிபதிகள் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் உள்புறமும், வெளிப்புறத்தில் எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கோயிலில் நடைப... மேலும் பார்க்க