What to watch on Theatre & OTT: விடாமுயற்சி, Thandel -இந்த வாரம் என்ன பார்க்கலாம...
கோவை: கூட்டணிக் கட்சிகள் போராட்டம்; புகார்களை அடுக்கிய திமுக எம்பி; மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கோவை தி.மு.க எம்.பி., ராஜ்குமார் கலந்து கொண்டார். பொதுவாக, மாமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை எழுப்புவார்கள். ஆனால் இந்தக் கூட்டத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சியினரே போராட்டத்தில் இறங்கினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/0u6zxn1h/IMG_20250207_WA0047.jpg)
சொத்து வரி உயர்வையும் டிரோன் சர்வே முறையையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்கள் மேயர் ரங்கநாயகியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது அவர்கள், “இந்தப் பிரச்னைகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவற்றைக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர். அவர்களிடம் ரங்கநாயகி பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றார். ஆனால் அதை ஏற்க மறுத்து கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/cv36t9g8/IMG_20250207_WA0018.jpg)
பிறகு அவர்கள் மாமன்ற வளாகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மறுபக்கம் சிறப்பு அழைப்பாளராக வந்த எம்.பி., ராஜ்குமாரும் தன் பங்குக்குக் கொந்தளித்தார்.
கூட்டத்தில் பேசிய ராஜ்குமார், “சாலையோர ஆக்கிரமிப்புகள் ஆபத்தானதாக மாறிக்கொண்டிருக்கின்றன. ஆதி காலத்திலிருந்து கோவை மாநகராட்சி நிர்வாகம்தான் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிர்வாகத்துக்கு வழங்கியதில் எனக்கு விருப்பமில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/jsalkoir/IMG_20250207_WA0047.jpg)
சூயஸ் நிர்வாகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. குழி தோண்டி மாதக் கணக்கில் அப்படியே விட்டு வைக்கின்றனர். அதிகாரிகள் சொன்னாலும் கேட்பதில்லை. சூயஸ் நிறுவனம் அவ்வளவு பவர் வாய்ந்ததா?
சூயஸ் நிறுவனத்தை நிறுத்த வேண்டும். இப்படியே சென்று கொண்டிருந்தால் தேர்தல் நேரத்தில் சாலைப் பணிகளை முடிக்க முடியாது. அடிக்கடி சாலைகளைத் தோண்டினால் மக்கள் தாங்க மாட்டார்கள். சாலைகளைத் தோண்டுவதை நிறுத்தாவிட்டால் பணி நடக்கும் இடங்களைத் தடுத்து நிறுத்துவது நானாகத்தான் இருக்கும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-09/7000a7ca-94cb-4a02-a5ef-d4e22cf39eac/IMG_20190924_WA0060.jpg)
எதிர்க்கட்சி மாதிரி பேசி விட்டேன் என நினைக்க வேண்டாம், மாமன்ற உறுப்பினர்கள் பேச முடியாத சூழலில்தான் நான் பேசுகிறேன். சூயஸ் விவகாரம் குறித்து மேயர், ஆணையர் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய வேண்டும்.” என்றார்.
பிறகுச் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்குமார், “சூயஸ் நிறுவனத்தால் தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படுவதில்லை. இதைத்தான் மாமன்றத்தில் சுட்டிக்காட்டினேன். கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர், மேயர் என யார் கூறினாலும் அவர்கள் கேட்பதில்லை. அந்த நிறுவனம் யாருக்குத்தான் கட்டுப்படும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/x2clmxa2/IMG_20250207_WA0044.jpg)
இதனால் மக்கள் செல்லும் இடம் எல்லாம் பிரச்னையாக உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் சீரமைப்பு பணிகளைச் செய்யவில்லை என்றால், துறை அமைச்சர், பொறுப்பு அமைச்சர் மற்றும் அதன் பின்பு முதலமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY