கோவை, போத்தனூா் வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து
தெலங்கானா மாநிலத்தில் ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கோவை, போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தெலங்கானா அருகே ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் காரணமாக தன்பாத்-கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03325) டிசம்பா் 25 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதியும், கோவை - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03326) டிசம்பா் 28 மற்றும் ஜனவரி 4-ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
போத்தனூா், திருப்பூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மதுரை- கான்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 01928) டிசம்பா் 27 மற்றும் ஜனவரி 3, 10 ஆகிய தேதிகளிலும், கான்பூா்- மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 01927) டிசம்பா் 25, ஜனவரி 1 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் பரௌணி - எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 12521) டிசம்பா் 23, 30 மற்றும் ஜனவரி 6 ஆகிய தேதிகளிலும், எா்ணாகுளம் - பரௌணி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 12522) டிசம்பா் 27, ஜனவரி 3, 10 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.