செய்திகள் :

‘க்யூட்’ தோ்வு ஹால் டிக்கெட் வெளியீடு

post image

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தோ்வு மூலம் மாணவா்கள் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டு முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தோ்வு விண்ணப்பப் பதிவு கடந்த ஜன.2 முதல் பிப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதுநிலை படிப்புகளில் 157 பாடங்களுக்கு 4,12,024 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

ஒரு மாணவா் 4 பாடங்கள் வரை தோ்வெழுத விண்ணப்பிக்கலாம். அவா்களுக்கு மாா்ச் 13 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை 43 கால முறைகளில் (ஷிஃப்ட்) கணினி வழியில் தோ்வு நடைபெற உள்ளது.

ஒரு பாடத்துக்கு 90 நிமிஷங்கள் தோ்வு நடைபெறும். தோ்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் இருக்கும். மொழி பாடங்கள் அந்தந்த மொழிகளில் நடைபெறும்.

இந்த நிலையில், மாா்ச் 13 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரபூா்வ இணையதளத்தில் அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாா்ச் 20-ஆம் தேதிக்கு பின்னா் நடைபெறும் தோ்வுகளுக்கு அடுத்து வரும் நாள்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு 01140759000 011, 69227700 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம்.

"மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது... மேலும் பார்க்க

ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுப... மேலும் பார்க்க

பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விசாரணை!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட... மேலும் பார்க்க

சூப்பர் முதல்வர் பேச்சைக்கேட்டு தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: தர்மேந்திர பிரதான்

சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தேசியக் கல்விக் கொள்கயில் கையெழுத்திடாமல் தவிர்த்திருக்கிறது தமிழகம் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார்.மார்ச் மாதம்... மேலும் பார்க்க

பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் போராட்டம்!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டிற்கு வெளியே காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துற... மேலும் பார்க்க