க்ளென் பிலிப்ஸ்தான் சிறந்த ஃபீல்டர்..! ஒப்புக்கொண்ட ஜான்டி ரோட்ஸ்!
இந்தத் தலைமுறையின் சிறந்த ஃபீல்டர் க்ளென் பிலிப்ஸ்தான் என ஜான்டி ரோட்ஸ் ஒப்புக்கொண்டார்.
கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ்தான்.
தற்போது, அவருக்குப் போட்டியாக நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் பிலிப்ஸ் பல சிறந்த கேட்ச்சுகளைப் பிடித்து அசத்தினார்.
பாயும் புலி, ஃபிளையிங் பிலிப்ஸ் எனப் பலவாறு க்ளென் பிலிப்ஸை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.
ஒருவர் எக்ஸ் தளத்தில் இந்தத் தலைமுறையின் சிறந்த ஃபீல்டர் க்ளென் பிலிப்ஸ்தான். மன்னிக்கவும் ஜான்டி ரோட்ஸ் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைப் பகிர்ந்த ஜான்டி ரோட்ஸ், “மன்னிப்புக் கேட்காதீர்கள், நானும் இதை ஒப்புக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இது கிரிக்கெட் உலகில் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, 55 வயதிலும் விழுந்து மாஸ்டர்ஸ் லீக்கில் ஃபீல்டிங் செய்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.