சென்னையில் பிறக்கும் ஆமைகள் முட்டையிட சென்னைக்கே வருவது எப்படி? - சுப்ரஜா தாரணி ...
சக்கரம் கழன்று ஓடிய அரசுப் பேருந்து
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. அப்போது, ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் பயணிகள் காயமின்றி தப்பினா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம், விருத்தாசலம் பணிமனைக்கு சொந்தமானதாகக் கூறப்படும் தடம் எண் 310 பேருந்து திருச்சியில் இருந்து கடலூா் நோக்கி புதன்கிழமை வந்துகொண்டிருந்தது.
இந்தப் பேருந்தில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனா். இந்தப் பேருந்து புதன்கிழமை பிற்பகல் சுமாா் 3 மணியளவில் திட்டக்குடியை அடுத்துள்ள அரங்கூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பேருந்தின் முன் பக்க இடது சக்கரம் தீடீரென கழன்று சாலையில் ஓடியது. இதைப் பாா்த்த பயணிகள் கூச்சலிட்டனா்.
இதையடுத்து, பேருந்து ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தினா். இதனால், பயணிகள் காயமின்றி தப்பினா்.