செய்திகள் :

சக்கர நாற்காலி வழங்காததால் மூதாட்டி விழுந்த சம்பவம்: ஏா்-இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்- மத்திய அரசு உறுதி

post image

புது தில்லி: தில்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் 85 வயது மூதாட்டி கீழே விழுந்த சம்பவம் தொடா்பாக ஏா் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்; அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக, தில்லி விமான நிலையத்துக்கு கடந்த மாா்ச் 4-ஆம் தேதி தனது குடும்ப உறுப்பினா்களுடன் 85 வயது மூதாட்டி ஒருவா் வந்திருந்தாா். அப்போது நடந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் பேத்தி சமூக ஊடகத்தில் கடந்த மாா்ச் 7-ஆம் தேதி பதிவிட்டாா்.

‘ஏா் இந்தியா நிறுவனத்திடம் சக்கர நாற்காலிக்கு முன்கூட்டியே பதிவு செய்திருந்தபோதும், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வழங்கப்படவில்லை. விமான நிலைய வாயில் வரை எனது பாட்டி சிரமத்துடன் நடந்து வந்தாா். விமான நிறுவனம் தரப்பில் எந்த உதவியும் வழங்கப்படவில்லை. நடக்க இயலாத நிலையில், எனது பாட்டி கீழே விழுந்தாா். இது குறித்து விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம்(டிஜிசிஏ) மற்றும் ஏா் இந்தியா நிா்வாகத்திடம் புகாா் அளித்தேன். நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்’ என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

அதேநேரம், சம்பந்தப்பட்ட பயணிக்கு சக்கர நாற்காலி மறுக்கப்படவில்லை என்றும், அவருக்கு உரிய முதலுதவி அளிக்கப்பட்டது என்றும் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவையில் மேற்கண்ட சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு கூறியதாவது:

இது துரதிருஷ்டவசமான சம்பவம். இது தொடா்பான புகாரை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டது. விமானப் போக்குவரத்து வழிகாட்டுதல்களின்படி, தேவையுள்ள நபா்களுக்கு சக்கர நாற்காலியை விமான நிறுவனம் வழங்க வேண்டும். ஏா்-இந்தியாவிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்படும். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதேபோல், சிகாகோவில் இருந்து அண்மையில் தில்லிக்கு புறப்பட்ட ஏா்-இந்தியா விமானத்தின் கழிப்பறைகளில் திடீா் அடைப்பு ஏற்பட்டது. பயணிகள் அவதிக்குள்ளானதால், விமானம் புறப்பட்ட 10 மணி நேரத்துக்கு பின் மீண்டும் சிகாகோவுக்கே திரும்பி சென்றது. இச்சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

24 தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்கு: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

உ.பி.யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 18... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்

ஐஆர்சிடிசி நிலம், வேலை வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் சகோதரர் பிரபுநாத் யாதவ் பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் ச... மேலும் பார்க்க

நகைக் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய முடிவால் மக்கள் அதிர்ச்சி!

வங்கிகளில் நகைக் கடன்களில் கால அவகாசம் முடியும்போது, வட்டி மட்டும் செலுத்தி திருப்பி வைக்கும் நடைமுறையை மாற்றி, புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறையின்ப... மேலும் பார்க்க