Vikatan Digital Awards 2025 Redcarpet Part 5 | Vijayvaradharaj, Preethi Asrani, ...
சக்தி மிக்க நைவேத்தியங்கள்...
கேரளத்தில் உள்ள பிரபல கோயில்களில் சக்தி மிக்க நைவேத்தியங்கள் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன.
திருவிழா மகாதேவர் கோயிலில் மூலிகைகளைச் சாறு எடுத்து அதை பாலுடன் கலந்து சிவனுக்கு நைவேத்தியம் செய்கின்றனர். பின்னர், அது பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த மூலிகைப் பால் வயிற்றுக் கோளாறுகளைச் சரி செய்யும் சக்தி கொண்டது.
கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின்போது, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் மணமுடைய கஷாயம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
குருவாயூரப்பன் கோயிலில் சுண்டக் காய்ச்சிய பால் பாயசத்தை நைவேத்தியமாகப் படைக்கின்றனர்.
கொட்டாரக்கராவில் விநாயகருக்கு சுடச்சுட நெய்யப்பம் படைத்துக்கொண்டேஇருக்கின்றனர். சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.
மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.