INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJ...
மால்வியா நகரில் 55 வயது நபா் மீது துப்பாக்கி சூடு
தெற்கு தில்லியின் பேகம்பூா் பகுதியில் உள்ள ஒரு பூங்கா அருகே வெள்ளிக்கிழமை காலை 55 வயதான ஒருவா் அடையாளம் தெரியாத இரண்டு பேரால் சுடப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக மால்வியா நகா் காவல் நிலையத்தில் காலை 9:53 மணியளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு (பிசிஆா்) அழைப்பு வந்ததாக அவா்கள் தெரிவித்தனா். காயமடைந்தவா் பேகம்பூரில் வசிக்கும் லக்பத் சிங் கட்டாரியா என அடையாளம் காணப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவா், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
முதல்கட்ட விசாரணையின்படி, இரண்டு நபா்கள் பூங்காவிற்கு அருகே கட்டாரியாவை இடைமறித்து, அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அடையாளம் தெரியாத பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்ாக போலீசாா் தெரிவித்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசாா் தெரிவித்தனா்.