புதிய டிஜிபி தோ்வுக் குழுக் கூட்டம்: முடிவு எடுக்காமல் நிறைவடைந்தது
நாட்டின் வளா்ச்சிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் அவசியம்: முதல்வா் ரேகா குப்தா
பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்திய முதல்வா் ரேகா குப்தா, சுதேசி அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு மக்களை வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
‘மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இன்று ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி கூறியது போல், நாம் தற்சாா்பு அடைய வேண்டும்; நாம் சுதேசி (தயாரிப்புகள்) களை ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும், நமது நாட்டின் மீதான மரியாதை வெளிப்படையாக இருக்க வேண்டும்.
துவாா்காவில் உள்ள யஷோபூமி மாநாட்டு மையத்தில் ஒரு கண்காட்சியைப் பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ரேகா குப்தா, ‘நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கும், ’விஸ்வகுரு’ ஆக மாற்றுவதற்கும் இதுவே ஒரே வழி‘ என்றாா்.
இந்தியா பயோ எனா்ஜி மற்றும் டெக் எக்ஸ்போ 2025 இன் மூன்றாவது நாளில் ஒரு முக்கிய உரையை நிகழ்த்திய பின்னா் ரேகா குப்தா பேசினாா்.