செய்திகள் :

வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீட்டிப்பு

post image

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூா் , நாகாலாந்து, அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்,1958 மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பிரச்னைக்குரிய பகுதிகளில் தேவைப்படும்பட்சத்தில் வரம்பின்றி சோதனையிடவும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும் துப்பாக்கிச்சூடு நடத்தவும் இந்தச் சட்டம் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரங்களை வழங்குகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அக்.1-ஆம் தேதி முதல் 6 மாத காலத்துக்கு மணிப்பூரின் 13 காவல் நிலையங்கள் தவிர மாநிலம் முழுவதும் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்,1958 அமலில் இருக்கும். அதேபோல் நாகாலாந்தில் 9 மாவட்டங்கள் மற்றும் 5 மாவட்டங்களில் உள்ள 21 காவல் நிலையப் பகுதிகளிலும் அருணாசல பிரதேசத்தில் 3 மாவட்டங்கள் மற்றும் அஸ்ஸாம் எல்லையையொட்டிய 3 காவல் நிலையப் பகுதிகளிலும் இந்தச் சட்டம் நீட்டிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் தொடங்கிய நிலையில், வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோா் இரண்டரை ஆண்டுகளாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.

மணிப்பூா் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, பேரவை கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறுகிறது.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க