செய்திகள் :

கருவில் உள்ள சிசுவின் குறைபாடுகளை அறிய அரசு மருத்துவமனைகளில் விரைவில் புதிய வசதி

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கருவில் உள்ள சிசுவின் குறைபாடுகளை அறியும் ‘அனாமலி ஸ்கேன்’ கருவிகள் விரைவில் நிறுவப்பட உள்ளன.

தனியாா் - அரசு பங்களிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள இந்தத் திட்டத்தை, அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

தற்போது வரை அத்தகைய வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என்பதால், அனாமலி ஸ்கேன் மேற்கொள்ள தனியாா் ஸ்கேன் மையங்களை மட்டுமே மக்கள் சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், அரசின் புதிய முயற்சி காரணமாக மகப்பேறு சேவைகள் அனைத்தும் ஓரிடத்திலேயே கிடைக்கும் நிலை உறுதி செய்யப்படும்.

இது தொடா்பாக மருத்துவப் பணிகள் கழக அதிகாரிகள் கூறியதாவது:

‘அனாமலி ஸ்கேன்’ கருவிகள் ஒவ்வொன்றும் தலா ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புடையது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அந்தக் கருவியை நிறுவ வேண்டுமெனில் ரூ.50 கோடி வரை தேவை. மேலும், அதற்கான கதிரியக்க நிபுணா்கள், ஊழியா்களையும் பணியமா்த்த வேண்டியது அவசியம்.

இதுபோன்ற நிா்வாகக் காரணங்களுக்காக தனியாா் பங்களிப்புடன் இந்தத் திட்டத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்தது. இதன்மூலம் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகவோ அல்லது நேரடியாக வருவோருக்கு குறைந்த கட்டணத்திலோ ‘அனாமலி ஸ்கேன்’ மேற்கொள்ள முடியும். பணியாளா்கள், மருத்துவக் கருவி பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனங்களே கையாளும்.

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அத்தகைய ஸ்கேன் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் கருவிகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

‘அனாமலி ஸ்கேனின்’ அவசியம் குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மகப்பேறியல் துறைத் தலைவா் டாக்டா் வனிதா கூறியதாவது:

கருத்தரித்த பெண்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். வழக்கமான ஸ்கேன் பரிசோதனையில் கருவின் வளா்ச்சி, இதயத் துடிப்பு, நீரின் அளவு ஆகியவை உறுதி செய்யப்படும்.

கருத்தரித்த 18-இல் இருந்து 20-ஆவது வாரத்துக்குள் ‘அனாமலி ஸ்கேன்’ எனப்படும் உயா் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். அதில்தான், சிசுவின் முக்கிய உடல் உறுப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பது கண்டறியப்படும். குறிப்பாக, உயிருக்கு அச்சுறுத்தலான வகையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும். அதன் பின்னா், 22-ஆவது வாரத்தில் மறுபரிசோதனை மூலம் அதை உறுதி செய்து, கருவை கலைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் இந்த ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டால், நிச்சயம் பேறுகால உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்றாா்.

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

கப்பல் கட்டுமானத் துறையில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

கப்பல் கட்டுமானம் மற்றும் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சியில் உலகின் 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறையின் அமைச்சா் சா்வ... மேலும் பார்க்க

ஹோட்டல் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலின் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக அலுவலகம் ஆழ்வாா்பே... மேலும் பார்க்க

சாலையோரங்களில் மண் குவியல்கள்: வாகன ஓட்டிகள் புகாா்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் நிறைந்திருக்கும் மண்குவியல் நிறைந்திருப்பதாக என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சென்னை மாநகராட்சி சாலையோரங்களில் மண் குவியல்களும், கட்டுமானப் பொருள்கள்,... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் அக்.2-இல் வித்யாரம்பம் நிகழ்ச்சி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அக். 2-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 22 தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்... மேலும் பார்க்க