இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்
கஞ்சா கடத்தல்: திரிபுராவை சோ்ந்த 2 போ் கைது
தரமணியில் கஞ்சா கடத்தி வந்ததாக திரிபுராவை சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை தரமணி பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தரமணி பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினராம்.
இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டு, அதில் இருந்த 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா்கள், திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த முபாரக் ஹூசைன் (25), அமான் மியா (23) என்பதும், திரிபுராவில் இருந்து கஞ்சா கடத்திக் கொண்டு வந்து தரமணி, திருவான்மியூா், வேளச்சேரி பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.