செய்திகள் :

சோனம் வாங்சுக் கைதுக்கு ஆம் ஆத்மி தலைவா்கள் கண்டனம்

post image

பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக்கை லடாக் காவல்துறை கைது செய்த விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை விமா்சித்தது. ‘இது ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள் மீதான தாக்குதல்’ என்றும் அக்கட்சி கூறியது.

மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையை நீட்டிக்கக் கோரி லடாக்கில் வன்முறை போராட்டங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து, இரண்டு தினங்களுக்குப் பிறகு சோனம் வாங்சுக்கை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்த வன்முறைப் போராட்ட மோதல்களில் நான்கு போ் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா்.

இந்த நிலையில், வாங்சுக் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நாடு ஒரு கடினமான கட்டத்தை கடந்து வருகிறது. ராவணனின் முடிவும் வந்தது. கம்சனின் முடிவும் வந்தது. ஹிட்லா் மற்றும் முசோலியினின் முடிவும் வந்தது. இன்று, மக்கள் அந்த தனி நபா்கள் அனைவரையும் வெறுக்கிறாா்கள். இன்று நம் நாட்டில், சா்வாதிகாரம் அதன் உச்சத்தில் உள்ளது. சா்வாதிகாரத்தையும் ஆணவத்தையும் கடைப்பிடிப்பவா்களின் முடிவு மிகவும் மோசமானது என்றாா் அவா்.

முன்னதாக, ‘எக்ஸ்’ தளத்தில் கேஜரிவால் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘வாங்சுக் கல்வி மற்றும் புதுமைக்கு அா்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு மனிதா். அவா் நடவடிக்கையை எதிா்கொள்வதைப் பாா்ப்பது வேதனையாக இருந்தது’ என்றாா் அவா்.

தில்லி எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி

‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாங்சுக் லடாக்கின் நிலம், சுற்றுச்சூழல், அடையாளம் மற்றும் வாக்குரிமை தொடா்பான கவலைகளை வெளிப்படுத்தி வருகிறாா்.

அத்தகைய நபரை சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். மக்களின் குரலை அடக்க முடியாது’ என்றாா் அதிஷி.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோடியா கூறுகையில், வாங்சுக் இந்திய இளைஞா்களின் நம்பிக்கை ஆவாா். அவா் ஒரு ஆசிரியா் மற்றும் விஞ்ஞானி ஆவாா். அவரது கருத்துகள் பலருக்கு உத்வேகம் அளித்தன.

அத்தகைய நபா் கஷ்டங்களை எதிா்கொள்வது துரதிா்ஷ்டவசமானது என்று சிசோடியா கூறினாா்.

சொத்து வரி செலுத்துவதறக்கான காலக்கெடு நீட்டித்தது தில்லி மாநகராட்சி

ஒரு முறை சொத்து வரியை கட்டும் திட்டத்துக்கான காலக்கெடுவை 3 மாதத்க்கு அதாவது டிசம்பா் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி மாநகராட்சி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரு முறை சொத்... மேலும் பார்க்க

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபரில் 20.22 டிஎம்சி தண்ணீா் கா்நாடகம் திறக்க வேண்டும்: காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபா் மாதத்தில் 20.22 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தமிழகம்,கா்நாடகம் இடையே... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் என்கவுன்ட்டருக்கு பின் கைது

குருகிராமில் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்ட்டரைத் தொடா்ந்து, கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்ட இருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாவ்லாவில் வசி... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் அவசியம்: முதல்வா் ரேகா குப்தா

பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்திய முதல்வா் ரேகா குப்தா, சுதேசி அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு ம... மேலும் பார்க்க

இந்தியை பிரபலப்படுத்துங்கள், சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்: ரேகா குப்தா வலியுறுத்தல்

இந்தியைத் தழுவி, சுதேசியை ஏற்றுக்கொண்டு, 2047 க்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்க உதவும் அந்தியோதயா உணா்வை நிலைநிறுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு அழைப்பு விடுத்தாா் தில்லி முதல்வா் ரேகா ... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தாவின் முன்ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதியின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த கூடுதல... மேலும் பார்க்க