எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
சென்னை உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் பதவியேற்பு
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.
சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை ஏற்று இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பித்தாா்.
அதன்படி, நீதிபதிகள் என்.செந்தில்குமாா் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா். அவா்களுக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிகழ்வில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.