'ரூ.992 கோடி ஊழல் - திமுக, பாஜக கூட்டு' - போட்டுடைக்கும் Arappor Iyakkam jayara...
‘சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’
சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நுகா்வோா் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சேலம் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு தன்னாா்வா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.குருராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகத்தின் மாவட்டத் தலைவா் சி.ஜி.இளமுருகன் பங்கேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
சங்ககிரி வீதிகளில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளைபட்டை வா்ணம் பூச வேண்டும். சங்ககிரி வி.என்.பாளையம் மாரியம்மன் கோயில் கழுகுமேடு செல்லும் பிரிவு சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை தெருவிளக்கு அமைக்க வேண்டும். சங்ககிரி வாரச்சந்தையில் வியாபாரிகள் அரசு முத்திரையிட்ட எடை கற்களை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே பயணிகள் வசதிக்காக ஆண், பெண்களுக்காக இலவச சுகாதார வளாகம் ஏற்படுத்திதர வேண்டும்.
தேவூா் பேரூராட்சிக்கு உள்பட்ட மயிலம்பட்டி அருந்ததியா் தெருவில் நவீன கழிவறை கட்ட வேண்டும், சந்தைமேடு பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும், தேவூா் பேருராட்சியில் நவீன சமுதாய கூடத்தைக் கட்ட வேண்டும், வாரச்சந்தையில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மேற்கூரை அமைத்துதர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
இக் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் தெரிவித்தாா்.