செய்திகள் :

"சச்சின் என் சகோதரரை விட பெரியவர் எனவும் கூற முடியாது!"- வினோத் காம்ப்ளியின் சகோதரர்

post image

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார்.

இப்போது அவர் மும்பையிலுள்ள அவருடைய இல்லத்தில் இருப்பதாகவும், அங்கு அவர் குணமடைந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

Sachin Tendulkar and VInod Kambli With Ramakanth Achrekar
Sachin Tendulkar and VInod Kambli With Ramakanth Achrekar

வினோத் காம்ப்ளியின் சகோதரரான விரேந்திர காம்ப்ளி, சச்சினுக்கும் வினோத் காம்ப்ளிக்கும் இடையேயான நட்பு குறித்தும், இவர்கள் தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகள் தொடர்பாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், "என் சகோதரருக்கும் சச்சினுக்கும் ஒரே மாதிரியான திறமைதான் இருந்தது. என் சகோதரர் சச்சினை விட பெரியவர் என்றோ, சச்சின் என் சகோதரரை விட பெரியவர் என்றோ சொல்ல முடியாது.

இருவரும் ஒரே மாதிரி இருந்தார்கள். வினோத் எப்போதும் தான் சச்சினை விட சிறந்தவன் என்று சொன்னதை நான் கேட்டதில்லை.

சச்சின் எப்போதும் வினோத்தை ஆதரித்து வந்தார். அவர்களின் நட்பு இன்னும் மிகவும் வலுவாக இருக்கிறது.

Virendra Kambli
Virendra Kambli

சச்சின், ஆண்ட்ரியாவை (வினோத் காம்ப்ளியின் மனைவி) அழைத்து வினோத்தின் நலம் விசாரிப்பார். சச்சின் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் ரஞ்சி ட்ரோபி போட்டிகளைப் பார்க்கச் சென்றபோது அவர்களை ஒன்றாகப் பார்த்தேன்.

நான் டிரஸ்ஸிங் ரூமுக்கு சாப்பிடச் செல்வேன், அங்கு சச்சின், வினோத், நான் மூவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக இருப்போம். நாங்கள் கிண்டல் செய்து, நல்ல நேரத்தைச் செலவிடுவோம்." என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ஈஷா கிராமோத்சவம் ! பத்திரிக்கையாளர் சந்திப்பு !

30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர். சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’, பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இ... மேலும் பார்க்க

Ronaldo: ரொனால்டோவுக்கு விரைவில் திருமணம்; நிச்சயதார்த்த புகைப்படத்தைப் பகிர்ந்த காதலி

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கிறிஸ்டியானோ ரொனால்டோதனது கால்ப... மேலும் பார்க்க

Dhoni : 'நீச்சல் குளம், ஜிம், கஃபே' - சென்னையில் தோனியின் புதிய பிஸ்னஸ்! - ஸ்பெஷல் என்ன?

தனியார் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்காக தோனி கடந்த ஒரு வாரமாக சென்னையில் முகாமிட்டிருக்கிறார். இந்நிலையில், இன்று சென்னை பாலவாக்கத்தில் தோனி '7Paddle' என சொந்தமாக ஒரு ஸ்போர்ட்ஸ் சென்டரை த... மேலும் பார்க்க

ISL : 'இந்தியன் சூப்பர் லீக் நடக்குமா நடக்காதா? - என்னதான் பிரச்னை?

'சிக்கலில் ஐ.எஸ்.எல்!'இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 12 வது சீசன் நடக்குமா நடக்காதா என்பதில் இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. அதனால் அணிகள் தங்களுடைய பயிற்சி முகாம்களை ஒத்தி வைத்திருக்கின... மேலும் பார்க்க

'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' - இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி

அரியலூரை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம், எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்கு தேர்வானார். கார்த்தியின் பின்னணியை பற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரின் குட... மேலும் பார்க்க