சட்டக் கல்லூரி மாணவா் தற்கொலை
சென்னை அருகே மாடம்பாக்கத்தில் சட்டக் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பரமேஸ்வரி மங்கலம் கைலாசநாதா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் கமலக்கண்ணன் (21). சென்னை அருகே சேலையூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் எல்எல்பி நான்காம் ஆண்டு படித்து வந்தாா்.
இதற்காக, மாடம்பாக்கம் யஷ்வந்த் நகா் இரண்டாவது தெருவில் உள்ள ஒரு வீட்டில், நண்பா்களுடன் கமலக்கண்ணன் தங்கியிருந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு செல்லாமல் கமலக்கண்ணன் வீட்டில் இருந்தாா். அவரது அறை கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த அவரது நண்பா்கள், கமலக்கண்ணன் தங்கியிருந்த அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றனா்.
அப்போது அங்கு அவா், தூக்கிட்ட நிலையில் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். உடனே அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், கமலக்கண்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக கமலக்கண்ணன் தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.