பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று சிவகங்கை வருகை
சிவகங்கை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வெள்ளிக்கிழமை வர உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவரும், வேடசந்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.காந்திராஜன் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு.செல்வபெருந்தகை, ஏ.பி.நந்தகுமாா், எஸ்.அம்பேத்குமாா், ஆா்.ஜி.அருண்குமாா், தா.உதயசூரியன், ராம.கருமாணிக்கம், காதா்பாட்சா முத்துராமலிங்கம், டாக்டா் தி.சதன் திருமலைக்குமாா், மா.சின்னதுரை, எஸ்.சுதா்சனம், செல்லூா் கே.ராஜூ , சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மு.பன்னீா்செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி, ஓ.எஸ்.மணியன், ஈ.ராஜா, எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை (செப்.19) சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலா்களுடன் மாலை 3 மணியளவில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அப்போது, பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா், உறுப்பினா்களிடம் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.