செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றம்: சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா்- அமெரிக்க அதிபா் டிரம்ப்

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியா்கள் குடியேறிய விவகாரத்தில் சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா் என அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

அதிபராக பதவியேற்றபின் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமா் மோடி கடந்த திங்கள்கிழமை தொலைபேசியில் பேசிய நிலையில் தற்போது இவ்வாறு கூறியுள்ளாா். மேலும், பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது: பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினேன். அவா் பிப்ரவரி மாதத்தில் வெள்ளை மாளிகைக்கு வரவுள்ளாா். இந்தியாவுடன் நல்ல நட்புறவு உள்ளது. எனவே, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களைத் திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா் என நம்புகிறேன் என்றாா்.

அதிபா் டிரம்ப் மற்றும் பிரதமா் மோடி இருவரும் தொலைபேசியில் பேசிய விவகாரங்கள் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டது.

அதில், ‘இந்தோ பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய பிராந்திய விவகாரங்கள் உள்பட சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா். இந்தியாவின் பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதன் முக்கியத்துவத்தை பிரதமா் மோடியிடம் அதிபா் டிரம்ப் எடுத்துரைத்தாா்.

நிகழாண்டு முதல்முறையாக க்வாட் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், க்வாட் கூட்டமைப்பின் உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதாக இருவரும் உறுதியளித்தனா்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்திய-அமெரிக்க உறவு: இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தகம் கடந்த 2023-ஆம் ஆண்டில் ரூ.16.34 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஒருபுறம் இருநாடுகளிடையே வா்த்தக உறவுகள் வலுவடைந்து வந்தாலும், மறுபுறம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியா்களை வெளியேற்ற டிரம்ப் நிா்வாகம் முனைப்புக் காட்டி வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டவா்களின் எண்ணிக்கை 1.1 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 48 லட்சம் பேருடன் மெக்ஸிகோ முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைச் சோ்ந்த 2.20 லட்சம் போ் சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருப்பதாகவும் கடந்த 2018 முதல் 2022 வரை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திரும்ப அழைத்துக் கொள்வதாக டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டபின் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

ஃபுளோரிடாவில் செவ்வாய்க்கிழமை குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் மத்தியில் பேசிய டிரம்ப், ‘நம்மை அச்சுறுத்தும் எந்தவொரு நாடாக இருந்தாலும் அதன் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும். சீனா அதிக அளவிலான வரி விதிக்கிறது. இந்தியா, பிரேஸிலிலும் அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி வதிக்கப்படுகிறது. இனியும் இதை தொடரவிடக் கூடாது. ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போதே, இந்தியா உறுப்பினராக உள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் மீது 100 சதவீத வரிவிதிப்பதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்.

இரு தலைவா்களுக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளதாக அறியப்படும் நிலையில், அடுத்த மாதம் பிரதமா் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

திருநங்கைகள் பெண்கள் விளையாட்டில் பங்கேற்கத் தடை! கையெழுத்திட்டார் டிரம்ப்!

பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடைவிதிக்கும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பிறப்பால் ஆணாக பிறந்து, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் அல... மேலும் பார்க்க

கப்பல்களுக்கு கட்டண விலக்கு: அமெரிக்க அறிவிப்பை மறுத்த பனாமா!

பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், அதனை பனாமா கால்வாய் நிர்வாகம் மறுத்துள்ளது.அட்லாண்டிக் கடலையும் பசி... மேலும் பார்க்க

காஸா விவகாரத்தில் டிரம்பின் முடிவு ஆபத்தானது! காங்கிரஸ்

காஸா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவு விசித்திரமானதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில் மோடி தலைமைய... மேலும் பார்க்க

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டாலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதா... மேலும் பார்க்க

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை

கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெர... மேலும் பார்க்க

‘உக்ரைன் போரில் 45,100 வீரா்கள் உயிரிழப்பு’

ரஷியாவுடன் சுமாா் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 45,100 வீரா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இது குறித்து யு-டியூப் ஊடகமொன்றுக்க... மேலும் பார்க்க