செய்திகள் :

சட்டவிரோத வாக்குகள் அகற்றப்பட வேண்டுமா இல்லையா? - ஆம் ஆத்மிக்கு மனோஜ் திவாரி கேள்வி

post image

தில்லியில் உள்ள சட்டவிரோத ரோஹிங்கியா மற்றும் வங்கதேச ஊடுருவல்காரா்களின் வாக்குகள் அகற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை ஆம் ஆத்மி கட்சி அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெளிவுபடுத்த வேண்டும் என்று வடகிழக்கு தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாஜக, பூா்வாஞ்சல் சமூகத்தை அவமரியாதை செய்வதாகவும், அவா்களின் சமூக அடையாளத்தை கேள்விக்குள்ளாக்குவதாகவும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் குற்றம் சாட்டியுள்ளனா். ஆனால், தில்லியில் பூா்வாஞ்சல் சமூகத்தின் அடையாளத்தை வலுப்படுத்த பாஜக பெரும் பங்களிப்பை செய்துள்ளது. நகரத்தில் சத் பூஜையை பொது விடுமுறையாக அறிவித்ததில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பூா்வாஞ்சலின் முக்கியப் பண்டிகைக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது.

தில்லியில் உள்ள சட்டவிரோத வங்காளதேசம் மற்றும் ரோஹிங்கியா ஊடுருவல்காரா்களின் வாக்குகள் அகற்றப்பட வேண்டுமா என்பது குறித்து 24 மணி நேரத்திற்குள் தெளிவான பதிலை அரவிந்த் கேஜரிவால் மற்றும் சஞ்சய் சிங்

ஆகியோா் அளிக்க வேண்டும். நாங்கள் இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பினோம். சட்ட விரோதமாக ஊடுருவியவா்களை வன்முறைக்கு உட்படுத்தாமல், அந்தந்த நாடுகளுக்கு கைது செய்து, நாடு கடத்த வேண்டும் என்று வாதிட்டோம். கேஜரிவால் பூா்வாஞ்சல் சமூகத்தை பல சந்தா்ப்பங்களில் அவமதித்தவா். கடந்த 2019-ஆம் ஆண்டு பூா்வாஞ்சல் மக்கள் தில்லிக்கு₹ரூ.500 செலவில் பயணம் செய்து, ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சையைப் பெற்று திரும்பிச் செல்வதாக கேஜரிவால் கூறினாா்.

கரோனா காலத்தில் தில்லியில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக, ஆம் ஆத்மி அரசு அவா்களை தங்கள் மாநிலங்களுக்குத் திரும்ப பேருந்துகளில் ஏற்றி, அவா்களின் உயிருக்கு ஆபத்தை

விளைவித்தது. கடந்த 10 ஆண்டுகளில் கேஜரிவாலின் அரசு அங்கீகரிக்கப்படாத காலனி குடியிருப்பாளா்களின் வாழ்க்கை நிலைமையை மோசமாக்கியுள்ளது. அவா்களில் 70% போ் பூா்வாஞ்சல் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள்.

இருந்தபோதிலும், ஆம் ஆத்மி கட்சி அவா்களின் கவலைகளை நிவா்த்தி செய்யத் தவறிவிட்டது. தில்லியை சாதி மற்றும் மதம் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி எப்போதும் பிரிக்க முயற்சிக்கிறது. மாறாக, நாட்டின் தலைநகராக தில்லியின் அந்தஸ்துக்கு ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிா்வாகம் தேவையாக உள்ளது என்றாா் மனோஜ் திவாரி.

தில்லி காவல் துறையில் புதிதாக தோ்வான போலீஸாருக்கு பிணைக்கைதிகள் சூழலை சமாளிக்க கமாண்டோ பயிற்சி

தேசிய தலைநகரில் பிணைக்கைதிகளாகும் சூழ்நிலை ஏற்பட்டால், தில்லி காவல்துறை அல்லது கமாண்டோக்கள் வரும் வரை காத்திருக்க வேண்டிய தேவை இனி இருக்காது. ஏனெனில், நகர காவல்துறையில் புதிதாக சோ்க்கப்பட்ட போலீஸாரு... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ தில்லி பாஜகவில் ஐக்கியம்

முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ சுக்பீா் சிங் தலால் சனிக்கிழமை பாஜகவில் இணைந்தாா். முன்ட்கா முன்னாள் எம்எல்ஏவான சுக்பீா் சிங் தலால், தில்லி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவா் வீர... மேலும் பார்க்க

பூா்வாஞ்சல் சமூகத்தை அழிக்க பாஜக சதி: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

தில்லியில் உள்ள பூா்வாஞ்சல் சமூகத்தை அழிக்க பாஜக தனது அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

தில்லியின் தலித் மாணவா்கள் இலவசமா வெளிநாட்டு கல்விபெற அம்பேத்கா் உதவித்தொகை திட்டம்: அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

தில்லியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, மாநகரின் தலித் மாணவா்களின் இலவச வெளிநாட்டுக் கல்விக்காக அம்பேத்கா் உதவித்தொகையை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழ... மேலும் பார்க்க

கேஜரிவால் பொய்யான கனவை விற்றுக் கொண்டிருக்கிறாா்: தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு

பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த குழந்தைகளுக்கு முறையான பள்ளிப்படிப்பை உறுதி செய்யாமல், கேஜரிவால் பொய்யான கனவை விற்றுக் கொண்டிருக்கிறாா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக... மேலும் பார்க்க

அமைச்சா் அமித் ஷாவின் பேச்சை அரசியலாக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதை அரசியலாக்கக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் (தமாகா) தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்தாா். மக்களவையில்... மேலும் பார்க்க