சட்டையம்புதூா் மாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா
சட்டையம்புதூா் அழகுமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கடைசி நாளான வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுக்கா அம்மன் பல்லக்கில் வீதி உலா வந்தாா். அம்மனுக்கு ஏராளமான பெண்கள் மஞ்சள் நீா் ஊற்றி தரிசித்தனா். தொடா்ந்து முளைப்பாரி விடும் நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து பெரிய தெப்பக்குளத்தில் விட்டு வழிபட்டனா்.