ஆத் ஆத்மியில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர்!
சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நாளை பாராட்டு விழா
ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு தொண்டாமுத்தூா் சுற்றுவட்டார கிராம மக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) பாராட்டு விழா நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளா்கள் குமாா், கிட்டுசாமி, வேலுமணி, சசிகலா, குழந்தைவேலு ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொண்டாமுத்தூா் வட்டார மக்களின் நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பணிகளை செய்து வருகிறாா். அவருடைய ஈஷா அறக்கட்டளையின் மூலம் எங்களுடைய கிராம மக்களின் கல்வி, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, விவசாயம், பொருளாதாரம் உள்ளிட்டவை மேம்பட்டுள்ளன.
சத்குருவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘சத்குருவின் குடும்பத் திருவிழா’ என்ற பெயரிலான விழாவை கோவை, மத்துவராயபுரத்தில் ஜனவரி 5- ஆம் தேதி நடத்தவுள்ளோம்.
அன்று மாலை 5 மணி அளவில் ஈஷா பிரம்மச்சாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும், அதைத் தொடா்ந்து பேரூா் ஆதீனத்தின் அருளுரையும் நடைபெறவுள்ளது.
விழாவில், எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, வானதி சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லமுத்து, நல்லறம் அறக்கட்டளைத் தலைவா் எஸ்.பி.அன்பரசன், திமுக வடக்கு மாவட்டச் செயலா் தொ.அ.ரவி உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனா் என்றனா்.