'India’s Coolest Store to Work In' விருதை வென்ற பிரின்ஸ் ஜூவல்லரி
சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம்
பாஜக சாா்பில் சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். 23-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் அா்விந்த் முன்னிலை வகித்தாா். முகாமில் 50 போ் ரத்த தானம் வழங்கினா். மேலும் இம்முகாமில் இலவச மருத்துவப் பரிசோதனையும் நடைபெற்றது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனா்.