சத்தியமங்கலம் புதிய நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
சத்தியமங்கலம் நகராட்சியின் புதிய ஆணையராக சு.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
சத்தியமங்கலம் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த தாமரை, பரமகுடி நகராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, அவிநாசி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த சு.வெங்கடேஸ்வரன் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.