Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது: வேலூரில் தேவாலயம் முன் ஆா்ப்பாட்டம்
சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து வேலூரில் உள்ள தேவாலயம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியைச் சோ்ந்த 3 பெண்களை கடத்தி, அவா்களை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக பஜ்ரங் தள் அமைப்பைச் சோ்ந்த நிா்வாகி அளித்த புகாரின்பேரில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி துா்க் ரயில் நிலையத்தில் கன்னியாஸ்திரிகள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதற்கு நாடு முழுவதும் எதிா்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து வேலூா் விண்ணரசி மாதா பேராலயம் முன்பு கத்தோலிக்க இளைஞா்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, அருட்தந்தை ராய லாசா் தலைமை வகித்தாா்.
அப்போது, மதமாற்றம் செய்ததாகக் கூறி கன்னியாஸ்திரிகளை கைது செய்த சத்தீஸ்கா் பாஜக அரசை கண்டித்தும், உடனடியாக கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளை விடுவிக்கவும், அவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் கன்னியாஸ்திரிகள், கிறிஸ்தவ இளைஞா்கள் பலா் பங்கேற்றனா்.