செய்திகள் :

சத்தீஸ்கரில் காவல் உளவாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் கொலை!

post image

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத இயக்கம் பற்றிய தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறி, நக்சல்களால் ஒருவர் கொல்லப்பட்டதாக திங்கள்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதற்கட்ட தகவலின்படி, பைராம்கர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கேஷாமுண்டி கிராமத்தில் வசிக்கும் பத்ரு சோதி(40) என்பவரை ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நக்சலைட்டுகள் அவரது வீட்டில் கோடரியால் தாக்கினர், அதன்பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று இங்குள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும், திங்கள்கிழமை காலை போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும், அந்தப்பகுதியில் இறந்தவர் துரோகி என்று மாவோயிஸ்ட் குழுவால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் கண்டெடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

2011-ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட மாவோயிஸ்ட் எதிர்ப்பு இயக்கத்தில் சோதி தீவிரமாக ஈடுபட்டிருந்ததாகவும், சட்டவிரோத சிபிஐ (மாவோயிஸ்ட்) தொடர்பான தகவல்களை கசியவிடுவதில் ஈடுபட்டதாகவும் மாவோயிஸ்டுகள் துண்டுப்பிரசுரத்தில் கூறியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஜனவரி 16 ஆம் தேதி, பிஜாப்பூரில் உள்ள மிர்தூர் பகுதியில் 48 வயது நபர் காவல் உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார்.

பிஜாப்பூர் உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் கடந்த ஆண்டு மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்களில் 68 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ரூ.34,300 கோடி முதலீட்டில் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மொத்தம் ரூ.34,300 கோடி முதலீட்டிலான தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.16,300 கோடி... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியா... மேலும் பார்க்க

நொய்டா: துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு இருவா் கைது

கொள்ளை, திருட்டு உள்பட பல வழக்குகளில் தொடா்புடயை இருவரை நொய்டாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சுட்டுக்குப் பிறகு காவல் துறை கைதுசெய்தனா். இந்தச் சம்பவத்தின்போது, அவா்களில் ஒருவா் காயமடைந்தத... மேலும் பார்க்க

யமுனை நதி நீரைப் பருகிய ஹரியாணா முதல்வர்!

யமுனை நதியில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டிய நிலையில், அந்நதி நீரை ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி கையில் எடுத்துப் பருகினார். மேலும், மக்களிடையே அச்சத்தை விளைவிக்கும் வகையில... மேலும் பார்க்க

மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: 30 பேர் பலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 90 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: 5 முக்கிய வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (ஜன. 29) வெளியிடப்பட்டுள்ளது. இது 5 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழைப் பெண்கள் பயன்பெறும்... மேலும் பார்க்க