Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 8 வீரர்கள் மரணம்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் வீர மரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) மாவோயிஸ்டுகள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். டிஆர்ஜி மற்றும் பஸ்தார் படையைச் சேர்ந்த தலா 4 பேர் மரணம் அடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் 5 பேர் இடதுசாரி தீவிரவாதத்தைக் கைவிட்டு பாதுகாப்புப் படையில் இணைந்ததாகக் கூறினார்.
கடந்த ஆண்டு பஸ்தார் பகுதியில் 792 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.
இரு நாள்களுக்கு ஜன. 6 ஆம் தேதி இதேபோல சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இரு நாள்களில் இரண்டாவது முறையாக தாக்குதல் நடைபெற்றுள்ளது.