Bigg Boss tamil 8: வெளியேறிய இரண்டு ஆண் போட்டியாளர்கள்! கடைசிக் கட்ட பரபரப்பில் ...
சத்தீஸ்கர்: சரணடைந்த நக்சல்களுக்கு 43 லட்சம் வெகுமதி!
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த 9 பேர் ரூ. 43 லட்சம் வெகுமதியுடன் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
மனிதாபிமானமற்ற மாவோயிஸ்ட் சித்தாந்தத்தால் ஏமாற்றம் அடைவதாக இரண்டு பெண்கள் உள்பட 9 நக்சல்கள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் மூத்த அதிகாரிகள் முன்பு சரணடைந்ததாக சுக்மா காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
மாநில அரசின் நியாத் நெல்லனார் என்ற திட்டத்தால் ஈர்க்கப்பட்டனர். இந்த திட்டம் தொலைதூர கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சரணடைந்த நக்சல்களுக்கு ஒருவருக்கு ரூ.8 லட்சம் பரிசுத் தொகையும், மேலும் நால்வருக்கு ரூ.5 லட்சமும், பெண் நக்சலுக்கு ரூ.3 லட்சமும், மேலும் இருவருக்கு தலா ரூ.2 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு, சுக்மா உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் 792 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.