செய்திகள் :

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

post image

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்துள்ளது.

துர்க் மாவட்டத்தின் பிலாய் நகரில் உள்ள பாகலின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை வந்த அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பூபேஷ் பாகலுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் குவியத் தொடங்கிய நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சோதனை குறித்து பூபேஷின் அலுவலகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது:

“சத்தீஸ்கர் சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று, ராய்கர் மாவட்டத்தில் அதானி குழும நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் எழுப்பப்பட இருக்கிறது.

இந்த நிலையில், பூபேஷ் பாகல் வீட்டுக்கு அமலாக்கத்துறையை சோதனைக்காக அனுப்பியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வழக்கில் கடந்த மார்ச் மாதமும் பூபேஷ் பாகலுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்தனர்.

Enforcement Directorate officials have been conducting searches at the house of former Chhattisgarh Chief Minister Bhupesh Baghel since Friday morning.

இதையும் படிக்க : பஹல்காம் தாக்குதல்: தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு!

மேற்கு வங்கம்: ஐஐடி-காரக்பூர் விடுதியில் இருந்து மாணவரின் சடலம் மீட்பு

மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி-காரக்பூர் விடுதியில் இருந்து மாணவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவரின் பெயர் ரிதம் மொண்டல் (21). அவர் நான்காம் ஆண்டு பொறியியல் மாணவர். அ... மேலும் பார்க்க

தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 45 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். தில்லியில் கடந்த சில நாள்களாக கல்வி நிலையங்கள் மி... மேலும் பார்க்க

பிகாரில் மின்னல் பாய்ந்து 33 பேர் பலி !

பிகாரில் இந்த வாரத்தில் மின்னல் பாய்ந்ததில் 33 பேர் பலியாகினர். பிகார் மாநிலத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களகாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின்போது ஏற்படும் மின்னால் மக்கள் மிகுந... மேலும் பார்க்க

வங்க மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார் மமதா: ஹிமந்தா!

வங்காள மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கவலைப்படுகிறார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, முஸ்லிம்-வங்க... மேலும் பார்க்க

வந்தே பாரத்! ரயில் நிலையம் வர 15 நிமிடம் முன்புகூட டிக்கெட் முன்பதிவு வசதி!

இனி, வந்தே பாரத் ரயில், ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புகூட, அந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ரயில் காலை 9 மணிக்கு திருச்சி... மேலும் பார்க்க

கட்டுக்கட்டாக பணம்! பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு

புது தில்லி: வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானம், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் நி... மேலும் பார்க்க