தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!
வந்தே பாரத்! ரயில் நிலையம் வர 15 நிமிடம் முன்புகூட டிக்கெட் முன்பதிவு வசதி!
இனி, வந்தே பாரத் ரயில், ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புகூட, அந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு ரயில் காலை 9 மணிக்கு திருச்சியை வந்தடையும் என்றால், அந்த ரயிலில் ஏறும் பயணிகள், வந்தே பாரத் ரயிலின் இருக்கை வசதியைப் பொறுத்து, காலை 8:45 மணி வரை ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் விரைவு ரயிலில் இருக்கும் அனைத்து இருக்கைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக, தெற்கு ரயில்வே இதுபோன்ற புதிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு ரயில் நிலையத்துக்கு வந்தே பாரத் ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணிகள் ரயில் நிலையங்களிலிருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மண்டல ரயில்வேயால் இயக்கப்படும் எட்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வியாழக்கிழமை முதல் புதிய முறை அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.