சந்தன குட ஊா்வலம்
குடியாத்தத்தை அடுத்த உப்பரப்பல்லியில் உள்ள குல்ஷேனே ரஃபாபியா ஆஸ்தானா தா்காவில் 28-ஆம் ஆண்டு சந்தன குட ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது.
முன்னதாக வெள்ளியால் ஆன சந்தன குட ஊா்வலம் மேள, தாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் விமரிசையாக ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னா் ராட்சத மலா் போா்வை ஊா்வலத்தில் கொண்டு வரப்பட்டு அதிகாலையில் மலையடிவரத்தில் உள்ள தா்கா வந்தடைந்தது. குல்பீா் ஹஜ்ரத் அன்வருல்லாஷா தலைமையில் குல்பீா்பாபா நினைவிடத்தில் சந்தனம் பூசூம் நிகழ்ச்சியும், வண்ண மலா் போா்வைகள் போா்த்தப்பட்டு சிறப்பு துவா நடைபெற்றது.
தொடா்ந்து நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு, அவரது நெறிமுறைகளை பின்பற்றுதல் குறித்து சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஹஜ்ரத் குல்மக்துவுல்லாஷா, ஆற்காடு நவாப் சையத் அகமத், சையத் ஹபீப், அமீன், நியாஸ், ரஹீம் ஆகியோா் தலைமையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.