சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக முல்டர் சேர்ப்பு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக வியான் முல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 10 அணிகள் மோதும் 18-வது ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்ஸ் காயமடைந்தார். இந்த நிலையில், கட்டைவிரல் காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் வியான் முல்டர் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க:சாம்பியன்ஸ் டிராபி: ‘கோல்டன் பேட்’ விருதை வெல்லப் போவது யார்?
2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற ஹைதராபாத் அணி, கடந்தாண்டு இரண்டாமிடம் பிடித்தது. 27 வயதான முல்டரை அந்த அணி ரூ.75 லட்சத்துக்கு எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்காக வியான் முல்டர் 18 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து முஷ்ஃபிகுர் ரஹிம் ஓய்வு!