செய்திகள் :

"சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி"- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல்

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தங்கம் பூசப்பட்ட கவசங்கள் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் ஏழாம் தேதி சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து கேரளா ஐகோர்ட் தலையிட்டு விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மீண்டும் அந்த கவசங்கள் சபரிமலைக்கு கொண்டுவரப்பட்டன. விலைமதிப்பு மிக்க பொருட்களை கோயில் வளாகத்தில் வைத்து பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததை கோர்ட் சுட்டிக்காட்டி இருந்தது. இதற்கிடையே 1999-ம் ஆண்டு விஜய் மல்லையா சுமார் 30 கிலோ தங்கம் உபயமாக வழங்கியிருந்தார். அதை பயன்படுத்தி சபரிமலையில் கோயில் துவாரபாலர்கள் உள்ளிட்ட அனைத்திலும் தங்கம் பதிக்கப்பட்டது. ஆனால் 2019-ல் மீண்டும் அதில் தங்கம் பதிக்கும்பணி நடைபெற்றுள்ளது. அப்படியானால் பழைய தங்கம் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி தேவசம்போர்டு விஜிலென்ஸ் விசாரணை நடத்தி வருகிறது. அதில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இப்போது வரைக்கும் பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே சபரிமலையில் தங்கம் காணாமல் போன விஷயத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கடுமையான விமர்சனங்களும் முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரளா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சபரிமலையில் விஜய் மல்லையா 1998ல் வழங்கிய தங்கத்தில் 30 கிலோ தங்கத்தில் இப்போது எவ்வளவு மீதம் உள்ளது என்று தேவசம்போர்டும் அரசும் தெளிவுபடுத்தவேண்டும்.

சபரிமலை கருவறை முன் உள்ள துவார பாலகர்கள்
சபரிமலை கருவறை முன் உள்ள துவார பாலகர்கள்

உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் யார் என்று பலமுறை நாங்கள் கேள்வி கேட்டும் எந்த பதிலும் இல்லை. அவரை உபயதாரர் என்ன சொல்லுகிறார்கள். ஆனால் உன்னி கிருஷ்ணன் போற்றி மூலம் திருடப்பட்ட தங்கத்தில் அன்றைய தேவசம் போர்டு நிர்வாகிகளுக்கும், ஆட்சியிலும் இருந்தவர்களுக்கும் பங்கு கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் தங்கத்தில் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் அதை வெளியே சொல்லாமல் மறைத்து வைத்தார்கள். இந்த விவகாரத்தில் தேவசம்போர்டு அமைச்சரும் தேவசம் போர்டு தலைவரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இன்றைய தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் முன்னாள் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்

காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

தங்கம் பூசும் பணிகள் மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு போய் செய்யப்பட்டதால் கேரள போலீஸ் எல்லைக்குள் அது வராது. எனவேதான் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக்கேட்கிறோம். இல்லை என்றால் காங்கிரஸ் கூட்டணி மிக தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கும். ஐயப்ப சுவாமி சிலையை திருடாமல் இருந்ததற்காக அரசுக்கும், தேவசம்போர்டுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் சிறிதுகாலம் கிடைத்திருந்தால் ஐயப்பன் சிலையையும் திருடிக்கொண்டுபோயிருப்பார்கள். கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டார்கள். இந்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் இதுவரை ஒரு சின்ன கருத்து கூட தெரிவிக்காமல் உள்ளார். ஐயப்ப சங்கமம் நடத்தி கபட பக்தியை வெளிப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன் சபரிமலை கோயிலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து பதில்கூற வேண்டும்" என்றார்.

``பா.ஜ.க-வின் C டீம் தான் விஜய்" - விமர்சிக்கும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"41 பேர் உயிரிழப்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட்டுவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். ஆனால், மதுரை உ... மேலும் பார்க்க

அன்று உங்களுக்கு தளபதி இன்று ஸ்டாலினுக்குத் தளபதி - கொதிக்கும் ஆர்.பி. உதயகுமார்

"தன்னை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை அரசியல் அநாதை ஆக்கினார், அன்று உங்களுக்கு தளபதியாக இருந்தவர்கள் இன்று ஸ்டாலினுக்கு தளபதியாக இருக்கிறார்கள்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் - ராஜேஷ் குமார்

தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் வாக்குத் திருட்டைக் கண்டித்து கையெழுத்து பிரசார ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் சுற்றுப்பயணம் 3-வது முறையாக தேதி மாற்றம்; காரணம் இதுதான்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 120 சட்டமன்ற தொகுதிகளைக் கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆரோவில்: `காவு கொடுக்கப்படும் விவசாயப் பண்ணை!’ - அம்பலமான சென்னை ஐஐடி ஒப்பந்தம்

வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்இந்த நிலையில்தான், ஆரோவில்லில் `பசுமைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்’ அமைக்க, ஆரோவில் அறக்கட்டளைத் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் ஜெயந்தி ... மேலும் பார்க்க

`எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் மீன்பிடிக்கும... மேலும் பார்க்க