செய்திகள் :

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டிரைலர் அப்டேட்!

post image

சுபம் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட்டினை தனது எக்ஸ் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார்.

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்குப் பிறகு அப்பெண்ணுடன் ஏற்படும் நெருக்கடிகளை சந்திக்கும் குடும்பம் என நகைச்சுவையாக (ஹாரர் - காமெடி) இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

முதல் இரவுக் காட்சியுடன் தொடங்கும், படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், பலரும் நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

நாயகனாக ஹர்ஷித், நாயகியாக ஷிரியா நடிக்க, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சினிமா பண்டி படத்தை எடுத்து கவனம் ஈர்த்த, எழுத்தாளர் வசந்த் மரிகாண்டி, இயக்குநர் பிரவீன் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

சமந்தா தனது எக்ஸ் பக்கத்தில், “சுபம் டிரைலர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்”எனக் கூறியுள்ளார்.

பீனிக்ஸ் - வீழான் படத்தின் முக்கிய அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் அறிமுகமாகும் பீனிக்ஸ் - வீழான் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, மகாராஜா திரைபடத்தில்... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்கள்: கேங்கர்ஸ் படக்குழு வெளியிட்ட விடியோ!

கேங்கர்ஸ் படக்குழு படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்களை ஸ்பாட்லைட் எனும் விடியோவாக வெளியிட்டுள்ளது. மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.முழுநீ... மேலும் பார்க்க

சிக்ஸ் பேக் சர்ச்சைக்கு பதிலளித்த விஷால்..! சூர்யா அல்ல, தனுஷ்தான் முதல்முறை!

சூர்யாவுக்கு முன்பாகவே நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் பதிலளித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ரெட்ரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். காதல் கலந்த ஆக்‌ஷன் படமா... மேலும் பார்க்க

ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக ஃபஹத் ஃபாசில்?

நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் ஃபஹத் ஃபாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினிகாந்த் நடிப்பில் 2023-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தை இயக்குநர... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் இரண்டாவது பாகம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.அரவிந்த் ... மேலும் பார்க்க