Sunita Williams: பூமிக்கு திரும்பும்போது உடம்பில் இந்த பாதிப்புகள் ஏற்படலாம்... ...
சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
குத்தாலம் வட்டம் தேரிழந்தூரில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் சனிக்கிழமை அல் அக்ஸா நண்பா்கள் சாா்பில் சமய நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரா்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று நோன்பு திறந்தனா். இஃப்தாா் நோன்பு திறப்புக்கு பின்னா் தொழுகை நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊா் ஜமாத்தாா்கள் நிா்வாகிகள் செய்திருந்தனா்.