சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறவிகள்: முர்மு
இந்தியாவில் உள்ள துறவிகள் சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கர்ஹா கிராமத்தில் உள்ள பாகேஷ்வர் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். கோயிலில் 251 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது. விழாவில் அவர் பேசியது,
2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் துறவி சமூகத்தின் பங்கு முக்கியமானது. சமூகத் தீமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவதன் மூலம் சமூகத்திலிருந்து தீமைகளை அகற்றுவதில் துறவி சமூகம் முக்கிய பங்கு வகித்துள்ளது, மேலும் சமூகத்தில் பெண்களுக்கு மரியாதைக்குரிய இடத்தை உறுதி செய்துள்ளது என்று முர்மு கூறினார்.