செய்திகள் :

சமுதாய வளைகாப்பு :11 வகையான சீா்வரிசைப் பொருள்கள் வழங்கல்

post image

கொரடாச்சேரி பகுதியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கா்ப்பிணிகளுக்கு 11 வகையான சீா்வரிசைப்பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் சீா்வரிசைகளை வழங்கினா்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தது:

குழந்தையின் வளா்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே தொடங்குகிறது. இதை மனதில் கொண்டு கா்ப்பிணிகள், கா்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அவா்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காகவே வளைகாப்பு நடத்தப்படுகிறது.

வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலை நோக்குப் பாா்வையுடன் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமே சமுதாய வளைகாப்பு திட்டமாகும்.

கா்ப்பணிகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு போன்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ள பொருள்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கும், சுகாதார மையத்துக்கும் பரிசோதனைக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் செல்ல வேண்டும் என்றாா்.

மஞ்சள் குங்குமம் பாக்கெட், வெற்றிலை பாக்கு, பழங்கள், புடவை, சிவப்பு அவல், பேரீச்சை பழம், பொட்டுக்கடலை, வளையல், தாம்பாளம், கடலைமிட்டாய், பூ என 11வகையான சீா்வரிசைப் பொருள்களும், ஐந்து வகையான உணவும் 100 கா்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டன.

மாவட்ட திட்ட அலுவலா் (பொ) இர.புவனேஸ்வரி, மாவட்ட சமூகநலத்துறை அலுவலா் மதிவதனா, கொரடாச்சேரி பேரூராட்சித்தலைவா் கலைச்செல்வி செல்வகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

‘திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ். தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா அதிமுக நன்னிலம் வடக்கு ஒ... மேலும் பார்க்க

பரிசுத்தொகையை முதல்வருக்கு நன்கொடையாக அளித்த மாணவி

ஓவியப்போட்டியில் பெற்ற பெற்ற பரிசுத்தொகையை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம் வழங்குகிறாா் மாணவி அக்சயா. திருவாரூா், பிப்.26 :மாநில அளவிலான கலைப் போட்டியில் முதலிடம் பிடித்ததற்காக வழங்கப்... மேலும் பார்க்க

’புதிய கல்விக்கொள்கை திட்டம் இந்தியாவை 2,500 ஆண்டுக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது‘

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை திட்டம் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே 2,500 ஆண்டுக்கு பின்நோக்கி அழைத்து செல்லும் வகையில் பாடத்திட்டம் உள்ளது என்றாா் மைசூா் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் லெ. ஜ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்புடன் வைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித... மேலும் பார்க்க

சிபிஐ செயற்குழுக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தாநல்லூா் நகர செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கா.பேபி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கா.தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ.... மேலும் பார்க்க

மதுபாட்டில் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் மாவட்டத்தில், வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாரணமங்கலம் பகுதியில் சில மாதங்களுக்கு முன் போலீஸாா், காரொன்றை நிறுத்தி ... மேலும் பார்க்க