செய்திகள் :

வார இறுதி நாள்கள்: 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

post image

வார இறுதி நாள்களை முன்னிட்டு 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வார இறுதி நாள்களான சனிக்கிழமை (மாா்ச் 1), ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) ஆகியவற்றை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை(பிப். 28) 245 பேருந்துகளும், சனிக்கிழமை 240 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 51 பேருந்துகளும், சனிக்கிழமை 51 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து, மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை 20 பேருந்துகளும், சனிக்கிழமை 20 பேருந்துகளும் என மொத்தம் 627 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுபோல, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதிச் சான்று: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நிலுவையில் உள்ள வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்களை மீண்டும் சமா்ப்பிக்க மாா்ச் 4 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை தொடங்கி கன்னியாகுமரி வரை கடலோரத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (பிப்.27) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்... மேலும் பார்க்க

பி.இ.-பி.எட். முடித்தவா்கள் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றலாம்: அரசாணை

பி.இ. பட்டத்துடன் பி.எட். முடித்தவா்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிவதற்கு தகுதியானவா்கள் என்று உயா் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உயா் கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக அனைத்துக் கட்சி கூட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்க... மேலும் பார்க்க

அரசு உதவி மருத்துவா் பணி நியமனம்: 400 போ் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அரசு உதவி மருத்துவா் பணி நியமனத்துக்கு தோ்வு செய்யப்பட்டவா்களில் 400 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் காலியாக உள்... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்!

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாள பராமரிப்புப் பணிகளின் க... மேலும் பார்க்க