தொண்டி அரசுப் பள்ளி ஆண்டு விழா
தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 87-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை (பிப்.25) நடைபெற்றது.
இதற்கு வட்டாரக் கல்வி அலுவலா் புல்லாணி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் மஹ்ஜபின் சல்மா, சமீமா பானு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ரோசானியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமுமுக மாநிலச் செயலா் சாதிக் பாட்சா, சுழற்சங்க துணை ஆளுநா் வெற்றிவேலன், ராஜசேகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியை சாந்தி ஆண்டறிக்கை வாசித்தாா்.
இதில் தமுமுக சாா்பில் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயந்தன், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக ஆசிரியை சுபஸ்ரீ வரவேற்றாா். ஆசிரியை புஷ்பா நன்றி கூறினாா்.