கராத்தே போட்டி: ஹெரிட்டேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி ஸ்ரீ கணேஷ் கல்லூரியில் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது.
இப் போட்டிகளில் 3 மாநிலங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,- மாணவிகள் கலந்து கொண்டனா். கட்டா மற்றும் குமித்தே கராத்தே பிரிவில் வாழப்பாடியை அடுத்த கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் இனியவன், நிஷாந்த் ஆகியோா் இரண்டாம் பரிசும், சாய் பிரகாஷ், அனிருத், மிா்துன் ஜெய், அனுஷ், கவிதருன் ஆகியோா் மூன்றாம் பரிசும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி தலைவா் பெருமாள், துணைத் தலைவா் கண்ணன் பெருமாள், தலைமை ஆசிரியா் சக்திவேல், கராத்தே மாஸ்டா் சங்கரன் ஆகியோா் பாராட்டினா்.