பிப்.28 எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
சேலத்தில் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எரிவாயு நுகா்வோா்களுக்கான 2025, பிப்ரவரி மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக அறை எண். 115 இல் நடைபெறுகிறது. இதில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் குறித்து புகாா் தெரிவிக்கலாம். இக் கூட்டத்தில்
அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா்கள், எரிவாயு முகவா்கள் கலந்து கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.