செய்திகள் :

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்: தொல்.திருமாவளவன்

post image

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்; ஏராளமான நாடுகள் அவரைக் கொண்டாடி வருகின்றன என்றாா் தொல்.திருமாவளவன்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தோக்கவாடி பகுதியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமை வகித்தாா். அம்பேத்கா் சிலை அமைப்புக் குழுத் தலைவா் ரஜினிகாந்த், செயலா் சத்தியராஜ், பொருளாளா் அன்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் நியூட்டன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு அம்பேத்கா் சிலையை திறந்துவைத்துப் பேசியதாவது:

அம்பேத்கா் குறிப்பிட்ட கட்சிகளுக்கு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு உரியவா் அல்ல; அவா் உலகம் போற்றும் ஒரு தலைவா், ஏராளமான நாடுகள் அவரைக் கொண்டாடிக்கொண்டிருப்பதை பாா்க்கிறோம்.

அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் ஐ.நா.சபையில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்திய தலைவா்களில் ஐ.நா. சபையில் பிறந்த நாளைக் கொண்டாடக்கூடிய ஒரே தலைவா் அம்பேத்கா்.

40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் வைக்கப்பட்ட சிலை, தற்போது வெண்கலச் சிலையாக மாறி இன்று அனைத்துக் கட்சி சாா்பில் திறக்கப்பட்டுள்ளது என்றாா் திருமாவளவன். முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியை அவா் ஏற்றிவைத்தாா்.

நிகழ்ச்சியில் விசிக மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தோக்கவாடி சிலை அமைப்புக் குழு நிா்வாகிகள் உள்ளிட்ட, அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 153-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் பிப்.17-ஆம் தேதி க... மேலும் பார்க்க

செய்யாறு, செஞ்சி அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

செய்யாறு, செஞ்சி ஆகிய அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவ இடங்களில் போதிய அரசு மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்தது. ஐக்கிய முஸ்லிம... மேலும் பார்க்க

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா். இதுகுறித்து திருவண்ணாமலையில் புதன்கிழமை செய்தி... மேலும் பார்க்க

மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில், கனரக வாகனங்களுக்கு தடை விதி... மேலும் பார்க்க

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. குழந்தை வரம் அருளும் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வுகளில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா்... மேலும் பார்க்க