மாசு இல்லாத பாரதம் ஜம்மு- குமரி சைக்கிள் பயணம் நிறைவு
மாசு இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சோ்ந்த மூத்த குடிமக்கள், ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் புதன்கிழமை கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.
மும்பையைச் சோ்ந்த சத்தீஷ் மங்கள் என்பவா் தலைமையில் மூத்த குடிமக்கள் 5 போ் காஷ்மீா் மாநிலம் லால்சவுக் என்ற இடத்தில் இருந்து கடந்த ஜனவரி 16ஆம் தேதி சைக்கிள் பயணத்தை தொடங்கினா். இவா்கள் மாசு இல்லாத பாரதத்தை உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தி இப்பயணத்தைத் தொடங்கினா்.
ஸ்ரீநகா், பதன்கோடு, அமிா்தசரஸ், சண்டிகா், வடதேரா, சூரத், மும்பை, திருவனந்தபுரம் வழியாக பல்வேறு மாநிலங்களைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைந்தனா். மொத்தம் 4 ஆயிரத்து 80 கி.மீ. தொலைவை 40 நாள்களில் கடந்து வந்துள்ளதாக தெரிவித்தனா்.