முதுகுளத்தூா் டிஎஸ்பி பொறுப்பேற்பு
முதுகுளத்தூரில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சின்னகண்ணு கடந்த ஜன. மாதம் 31-ஆம் தேதி பணி நிறைவு முடிந்து ஓய்வு பெற்றாா். இதையடுத்து, கடந்த ஒரு மாத காலமாக இந்தப் பதவி காலியாக இருந்தது. இதற்கிடையே, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா்.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்திலிருந்து பணி மாறுதலில் முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா்.இவருக்கு காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், சிறப்பு தனிப் பிரிவு காவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னா், புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் தெரிவித்ததாவது: முதுகுளத்தூா் காவல் சரகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது பினையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.