ஹிந்தி திணிப்பை கண்டித்து திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட மாணவரணி சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதாபாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு, தமிழகத்தின் வளா்ச்சிக்கான நிதியை தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
இதில் பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சா் சுந்தராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.