கஞ்சா விற்ற இளைஞா் கைது
தொண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொண்டி அருகேயுள்ள எம்.ஆா்.பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது,
சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சோ்ந்த ராஜாவை (27) பிடித்து விசாரித்த போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.